குரூப் 4 தேர்வு நிலையங்களில் கதறி அழுத தேர்வர்கள்; 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தேர்வில் அனுமதியில்லாததால் தவிப்பு!

2 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் சில இடங்களில் தேர்வெழுத அனுமதிக்காததால் தேர்வர்கள் கதறி அழுத சம்பவங்களும் அரங்கேறியது.

குரூப் 4 தேர்வு நிலையங்களில் கதறி அழுத தேர்வர்கள்; 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தேர்வில் அனுமதியில்லாததால் தவிப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு:

தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7 ஆயிரத்து 32 பணியிடங்களுக்கு இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது.

தேர்வு நிறைவு:

இத்தேர்வை, 12 லட்சத்து 67 ஆயிரம் பெண்கள், 9 லட்சத்து 35 ஆயிரம் ஆண்கள், 131 மாற்று பாலினத்தவர் என  22 லட்சம் பேர் எழுதினர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணிக்கு நிறைவடைந்தது.

கதறி அழு அழும் தேர்வார்கள்:

முன்னதாக பல்வேறு இடங்களில் தாமதமாக வந்த காரணத்தால் சிலர் தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை.

சென்னை:

சென்னை நங்கநல்லூரில் உள்ள ஏ எம் ஜெயின் பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரையில் தாமதத்தால் 10 க்கும் மேற்பட்ட தேர்வர்கள்  அனுமதிக்கப்படவில்லை. அதிகாரிகள் கறார் காட்டியதால் மனமுடைந்த தேர்வர் கதறி அழுதது பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல்:

இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே  சாய் பரத் கல்லூரி தேர்வு மையத்தில் 2 நிமிடம் தாமதாக வந்த 15-க்கும் மேற்பட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர்களும் கதறி அழுது புலம்பியபடி  சென்றனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியிலும் சில நிமிடங்கள் தாமதமாக வந்தவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை. சில இடங்களில் தேர்வு மையமானது பிரதான சாலையில் இருந்து 2 அல்லது 3 கிலோ மீட்டர் தொலைவில் இருந்ததும், அங்கு முறையான போக்குவரத்து வசதி இல்லாததுமே தாமதத்திற்கு காரணம் என தேர்வர்கள் வேதனை தெரிவித்தனர்.