ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கான வழக்குகளை... திரும்பப்பெறக் கோரி மனு தாக்கல்...!

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கான வழக்குகளை...  திரும்பப்பெறக்  கோரி மனு தாக்கல்...!

கடந்த 2017ஆம் ஆண்டு  ஜல்லிக்கட்டு போட்டி மீதான தடையை நீக்க கோரியும் ஜல்லிக்கட்டுக்கான சட்டம் நிறைவேற்ற கோரியும்  தமிழக முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து அவசரம் சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது. அதோடு, போராட்டம் தொடர்பாக வழக்குபதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு வழக்குகளும் கைவிடப்பட்டன. 

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மதுரை தமுக்கம் மைதானம் ,செல்லூர் , அலங்காநல்லூர் அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட 200 நபர்கள் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். மேலும், இந்த வழக்குகள் திரும்பப் பெறாத நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. 

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கான வழக்குகளை திரும்பப்பெறக்  கோரி தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு வழக்கு முறியடிப்பு குழு என்ற ஒரு அமைப்பு மூலமாக தமிழக அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டுவருகிறது. 

 இதனிடையே நேற்று ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறபித்தது

இதையடுத்து,  ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது சிபிசிஐடி தாக்கல் செய்த வழக்கினை தமிழக அரசு திரும்ப பெற கோரி ஜல்லிக்கட்டு வழக்கு முறியடிப்பு குழுவினர் சார்பில் மதுரையில் உள்ள தென்மண்டல ஐஜி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதையும் படிக்க     } செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்ய ஆளுநரிடம் வலியுறுத்துவோம் - அண்ணாமலை காட்டம்!

பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கு முறியடிப்பு மீட்டுக் குழுவினர் கூறியதாவது, 

" ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து வழக்கு நடத்தி வருகின்றனர் இதனால் மதுரை மற்றும் தமிழக முழுவதிலும் இருக்கக்கூடிய 200 இளைஞர்கள், பெண்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.  நாள்தோறும் தங்களது பணிகளை விடுத்து நீதிமன்றத்திற்கு அலைக்கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 எனவே தமிழக அரசு சிபிசிஐடியால்  தொடரப்பட்ட வழக்கினை திரும்ப பெற  வேண்டும் எனவும் தாங்கள் எந்த பின்புலம் இன்றி பொதுமக்களோடு சேர்ந்து போராட்டம் நடத்தினோம் ஆனால் தங்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருவது வேதனை அளிக்கிறது",  என தெரிவித்தனர்.  

இதையும் படிக்க     } "ஜல்லிக்கட்டு வெற்றி விழா, ஜனவரி மாதம் கொண்டாடப்படும்" அமைச்சர் மூர்த்தி தகவல்!