கால்வாய்களுக்கும் சென்றடடைந்தது காவிரி நீர்.. மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக வயலுக்குச் சென்ற விவசாயிகள்!!

காவிரி நீர் வந்தடைந்ததையடுத்து தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே செல்லப்பன்பேட்டையில்  விவசாயிகள் பொன்னேர் பூட்டும் நிகழ்ச்சி மேற்கொண்டனர்.

கால்வாய்களுக்கும் சென்றடடைந்தது காவிரி நீர்.. மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக வயலுக்குச் சென்ற விவசாயிகள்!!

ஜுன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மே மாதம் 24-ம் தேதியே நீர் திறக்ப்பட்டது.

கல்லணையில் இருந்து 27-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு ஆறு மற்றும் வாய்க்கால்களில் நீர் வரத்து தொடங்கியதால் குறுவை சாகுபடி பணிகள் வேகமெடுத்துள்ளன. விவசாயிகள் குலதெய்வக் கோவிலுக்கு விதை நெல், ஏர் கலப்பை, மாட்டு வண்டியுடன் சென்று வணங்கி விட்டு மேளவாத்தியம் முழங்க ஊர்வலமாக செல்லப்பன்பேட்டை பகுதியில் உள்ள வயலுக்கு சென்று வழிபாடு நடத்தி. நாட்டுப்புற பாடல்களை பாடினர்.

பின்னர் ஏர் பூட்டி வயலை உழுது விதை நெல்லை விதைத்தனர். இந்த ஆண்டு நல்ல மழை பெய்துமுப்போக நெல் சாகுபடி நடைபெறவும் அனைத்து பயிர்களும் நன்கு விளைந்து வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்று பிரார்த்தித்தனர்.