பள்ளியில் இடைநின்ற மாணவர்களை கணக்கெடுக்க மத்திய அரசு தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்...

பள்ளியில் இடைநின்ற மாணவர்களை கணக்கெடுக்க மத்திய அரசு தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்...

பல்வேறு காரணங்களால் பள்ளிகளில் இடையில் படிப்பை நிறுத்திய குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தமிழக அரசை, மத்திய அரசு கேட்டுள்ளது. 

பொருளாதார நிலை, வாழ்வாதாரம் இல்லாமல் ஏழ்மை நிலை, குழந்தை தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் தங்களது படிப்பை இடையில் நிறுத்தும் நிலை உள்ளது. தமிழகத்திலும் பல இடங்களில் இந்த இடைநிற்றல் உள்ளது. இதையடுத்து, பள்ளி இடைநிற்றல் குழந்தைகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கிராம அளவில் குழுக்களை நியமித்து பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் தொடர்பான புள்ளி விவரங்களை சேகரிக்கவும் மத்திய அரசு கேட்டுள்ளது. கொரோனா பரவல் தொடங்கியதற்கு பிந்தைய காலத்தை அளவீடாக கொண்டு பள்ளிக் குழந்தைகளின் இடைநிற்றல் விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.