மத்திய அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்!

பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியார் மயமாக்குவதை கண்டித்து மத்திய அரசு ஊழியர்கள் சம்மேளனம் சார்பில், கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவனில், மத்திய அரசு பொது துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் சம்மேளம் சார்பில் கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் துரை பாண்டியன் கூறுகையில், மத்திய தொடர்ந்து அனைத்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் அதன் தொடர்ச்சியாக தற்போது இந்திய பாதுகாப்பு துறையில் உள்ள 41 தளவாட உற்பத்தி நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், இல்லையென்றால் நாடு தழுவிய போராட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் ஈடுபடுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

அதேபோல் பாதுகாப்பு துறையில் வேலை நிறுத்திற்கு தடை என்கிற அவசர சட்டத்தையும் திரும்பப்பெற வேண்டும் என்றும் கூறினார்.