தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..அதில் உங்கள் மாவட்டம் இருக்கிறதா.? 

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..அதில் உங்கள் மாவட்டம் இருக்கிறதா.? 

தமிழகத்தில் 10 மாவட்டங்களில், ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இலங்கையின் மீது நிலைக்கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  மற்றும் வெப்பசலனம் காரணமாக, தமிழகத்தில் மழைப்பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சேலம், விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது.  

இதேபோல் நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களுக்கு உட்பட்ட ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளுக்கு உட்பட்ட ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.