11 மாவடங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டம் தெரியுமா? மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

11 மாவடங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டம் தெரியுமா? மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!!

தமிழக பகுதிகளின் மேலடுக்கில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நீலகிரி, கோவை, உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜூன் 3 மற்றும் 4ஆம் தேதி இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின்  சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

தொடர்ந்து இன்றும், நாளையும் தென்மேற்கு வங்க கடலோர பகுதி, குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதிகள், தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல், லட்சத்தீவு, கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.