நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்...

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை உள்ளிட்ட  7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்...

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் 7-ம் தேதியன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 மற்றும் 9-ம் தேதிகளில் தேதியன்று தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை  வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,  நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதி, கேரள, கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதி, கர்நாடக கடலோர பகுதிகளில் மணிக்கு  40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று  வீசக்கூடும் என்பதால் இரு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.