தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு...

தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு...

கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, தென் மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில்  குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.