அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு...!

அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு...!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 7 நாட்களுக்கு மழை  பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 02.08.2023 முதல் 08.08.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : "வாஷிங்டன் செல்லும் பிரதமருக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லையா?" கார்கே சரமாரி கேள்வி!

அதன்படி, அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்  முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும் என்றும், சில இடங்களில் 2 டிகிரி முதல்  3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அறிவித்துள்ளது. 
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது வெப்பம் அழுத்தம் ஏற்பட்டு அசவுகரியம் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளது.

அதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை  பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.