தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை மையம்

மேற்கு திசை காற்று  மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

வருகிற 15ம் தேதி நீலகிரி, கோவை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை  வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,   இலட்சத்தீவு மற்றும்  அதனை ஒட்டிய  குமரிக்கடல் பகுதி, கேரளா - கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும்  அதனை ஒட்டிய  தென் கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல்   பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் வருகிற 17ம் தேதி வரை கடலுக்கு செல்ல வஏண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.