காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 11 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு...!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 11 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு...!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு வங்கக் கடலில் இன்று உருவாக உள்ள மோச்சா புயல், 5 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து, இன்று மாலை 5 மணி அளவில் புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதையும் படிக்க : பஞ்சாப் உள்ளிட்ட 4 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல்...விறுவிறு வாக்குப்பதிவு!

இந்நிலையில், தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை தீவிர புயலாக மாறி, வடக்கு மியான்மர் கடற்கரை இடையே கரையை கடக்கும் எனவும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருநெல்வேலி மற்றும் காரைக்கால் ஆகிய 11 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.