கடலோர மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று  மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று, கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று  மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை, டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம்,   மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் காலை நேரங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும் என குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், இலங்கைக்கு தென்கிழக்கே, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், இடி மழையுடன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு, 45 கி.மீ., வேகம் வரை வீசக்கூடும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லவும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.