வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு!!

தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தில் பருவமழை காலம் முடிந்த பிறகு, வளிமண்டல சுழற்சி, காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அந்த வகையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்று தென் மாவட்டங்களின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.