ஒற்றைக் காலில் சிலம்பம்! மாவட்ட அளவில் முதல் பரிசு!!!

சிலம்பத்தில் ஆர்வம் கொண்ட சிறுமி, ஒன்றைக்காலில் நின்று சிலம்பம் சுற்றி அசத்தல் செய்துள்ளார். இதனை ஒட்டி, மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றுள்ளார்.

ஒற்றைக் காலில் சிலம்பம்! மாவட்ட அளவில் முதல் பரிசு!!!

செங்கல்பட்டு: மறைமலைநகர் அடுத்த ராஜீவ் காந்தி நகர் 9வது குறுக்கு தெருவை சேர்ந்த பாண்டியன் - ஹேமமாலினி தம்பதியின் 9 வயது மகள் ரக்ஷையா. அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வரும் இந்த சிறுமிக்கு சிலம்பம் கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருந்ததால், கடந்த இரண்டு மாதங்கள் முன்பு முதல் முறைப்படி சிலம்பம் கற்று வந்துள்ளார்.

இந்தநிலையில் சிலம்ப கலையில் சாதனை படைக்க  வேண்டும் என்ற ஆர்வத்திலும், எண்ணத்திலும் தொடர்ந்து சிலம்பம் சுற்றுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்காக கடும் பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில், சிறுமி ஒன்றைகாலில் நின்று சிலம்பம் சுற்றி மாவட்ட அளலான நடைபெற்ற சிலம்ப போட்டியில் முதல் பரிசினை வென்றுள்ளார்.

ஒற்றை நெடுங்கம்பு கொண்டு தனது சாதனை முயற்சியை தொடங்கிய சிறுமி சுவடு 1, 2, 4, ஒற்றை சுவடு, இரட்டை சுவடு, முக்கோன சுவடு என தான் பயின்ற சிலம்பு கலையை செய்து காட்டினார். அடுத்த கட்டமான தொடர்ந்து 10 நிமிடம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றியதால், உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு மாநில, உலக, அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைக்க உள்ளதாகவும் கூறினார்.