அடுத்தடுத்து ஆய்வில் ஈடுபட இருக்கும் முதலமைச்சர் மற்றும் தலைமை செயலாளர்....

வடகிழக்கு பருவமழை நெருங்கும் நிலையில் முதலமைச்சர், தலைமை செயலாளர் சென்னையில் அடுத்தடுத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

அடுத்தடுத்து ஆய்வில் ஈடுபட இருக்கும் முதலமைச்சர் மற்றும் தலைமை செயலாளர்....

வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளின் இறுதி நிலை குறித்து 7 ஆம் தேதி தலைமைச் செயலாளர் மற்றும் 8 ஆம் தேதி முதலமைச்சர் என அடுத்தடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | வடகிழக்கு பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு என்ன?

சென்னையில் மழை நீர் வடிகால் அமைத்தல்,  தூர்வாருதல், பக்கீங்கம், ஓட்டேரி, மாம்பலம் உள்ளிட்ட கால்வாய்கள், ஆறுகள் ஆகியவற்றை தூர் வாரி, கரைகளை பலப்படுத்தும் பணிகள்  நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு பருவமழை இந்த மாதம் 15 ஆம் தேதிக்கு பிறகு தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக முடிக்கும் நோக்கில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், சென்னையில் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | திமுக தலைவர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்யும் ஸ்டாலின்...!

Dr V Irai Anbu is new chief secretary of Tamil Nadu- The New Indian Express

சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணி துறை ஆகியவை சென்னையில் மேற்கொண்டு வரும் இந்த பணிகள் தொடர்பாக தொடசர்ச்சியாக, அமைச்சர்கள் கே.என் நேரு, ஏ. வ.வேலு, மா.சுப்ரமணியன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், தலைமை செயலாளர் இறையன்பு, நகராட்சி நிர்வாக துறை செயலாளர் சிவதாஸ் மீனா மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் என பலர் பல்வேறு முறை ஆய்வு செய்து பணிகளை விரைவுப்படுத்தி அக்டோபர் மாதம் 15 ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்க உத்தரவிடபட்டுள்ளது.

மேலும் படிக்க | எதிரிகளுக்கு துணை போக மாட்டீர்கள் என நம்புகிறேன்.. நடவடிக்கை பாயும்.. தொண்டர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை..!

இதனிடையே பருவமழைக்கு முன்னதாக முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் முன்னெச்சக்கை மற்றும் மழை நீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு வரும் 7 ஆம் தேதியும் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 ஆம் தேதியும் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | வாட்ஸ்அப் செய்திகளை படித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களுக்கு பதில் சொல்லி திருத்த முடியாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

Women need to overcome challenges boldly: Mayor Priya Rajan - Times of India