சென்னை லைட் ஹவுஸ் - பட்டினப்பாக்கம் ஆக்கிரமிப்பு மீன்கடைகளை அகற்ற முன்வந்த நீதிமன்றம் !!!

சென்னை லைட் ஹவுஸ் - பட்டினப்பாக்கம் ஆக்கிரமிப்பு மீன்கடைகளை அகற்ற  முன்வந்த நீதிமன்றம் !!!

சென்னை கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் லூப் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள மீன்கடைகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது

சென்னை கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை, அப்பகுதி மீனவர்கள் ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஐஸ் பெட்டிகளை சாலையோரம் வைத்தும், வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்துவதாலும் காலை 8 மணி முதல் 11 மணி வரையும்; மாலை 4 மணி முதல் இரவு எட்டு மணி வரையும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

மீனை ஆசை தீர கடித்து சாப்பிட முடியாமல் செய்தால் என்ன நியாயம்? | TN  Fisheries department to take action over formalin in Chennai fish samples  issue - Tamil Oneindia

மேலும் படிக்க | ‘நுங்கு புகழ்’ டாக்டர் ஷர்மிகா மீது பாய்ந்த 2 புகார்

அந்த மனுவில், மீன் கடைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கும், மாநகராட்சிக்கும் உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை  கோரியுள்ளது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, லூப் சாலையின் கிழக்கு பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சாலை பயன்படுத்துவோருக்கு இடையூறு ஏற்படுத்தும்  ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனத் தெரிவித்தனர். பின்னர், நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையிலான அமர்வில், இந்த வழக்கை நாளை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு  பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க | குத்தகை அனுமதி விவகாரம்...! விவசாயிகள் போராட்ட அறிவிப்பு