அப்பா அம்மா எவ்வளோ கஷ்டப்படுறாங்க? நீங்க... - அறிவுரை வழங்கிய காவலர்...

உயிரைப்பற்றி கவலைப்படாமல் படிக்கட்டில் அபாயகரமாக பயணம் செய்த பள்ளி மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி போக்குவரத்து காவல் ஆய்வாளர் அறிவுரை வழங்கினார்.

அப்பா அம்மா எவ்வளோ கஷ்டப்படுறாங்க? நீங்க... - அறிவுரை வழங்கிய காவலர்...

திங்கள் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை நேரத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என அனைவரும் பேருந்தில் படியில் பயணம் செய்தவரே பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்கின்றனர். அதில் ஒரு சில பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டு மற்றும் ஜன்னல் என பேருந்தின் அனைத்து இடங்களிலும் அபாயகரமான முறையில் பயணம் செய்து கொண்டிருப்பதாக பொதுமக்களும் பெற்றோர்களும் தொடர்ச்சியாக புகார்கள் கொடுத்து வந்தனர்.

மேலும் படிக்க | இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு ஒரே சீருடையா?!!

இந்த நிலையில் காவல் ஆணையர் உத்தரவுப்படி அந்தந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் அவர்களுடைய எல்லைக்குட்பட்ட பள்ளிகளுக்கு நேரடியாக சென்று, போக்குவரத்து விதி மீறல்களை பற்றியும் பேருந்தில் பயணம் செய்வது பற்றியும், விழிப்புணவர்களை ஏற்படுத்தி வந்தார்கள். இந்த நிலையில் இன்று காலை புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் பள்ளி  மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் அபாயகரமான முறையில் தொங்கிக் கொண்டு வந்திருந்தனர்.

மேலும் படிக்க | சிற்றுண்டி திட்டம் இன்று தொடக்கம்! முதற்கட்டம், தொடக்கப்பள்ளி மாணவர்கள்!

அவர்களை வேப்பேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டி வேலு பேருந்தில் இருந்து இறக்கி தனியாக அழைத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். “பெற்றோர்கள் உங்களை எப்படி துன்பப்பட்டு படிக்க வைக்கிறார்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் எனவும், அவர்களுடைய இன்பத் துன்பங்களை வைத்து உங்களை படிக்க வைத்தால் நீங்கள் அவர்களைப் பற்றி கவலைப்படாமல் உயிரை பனையம் வைத்து பேருந்தில் பயணம் செய்கிறீர்கள். இனிமேல் இது போன்ற செயல்களில் நீங்கள் ஈடுபடக்கூடாது, கூட்டமாக பேருந்து வந்தால் அடுத்த பேருந்தில் ஏறி செல்லுங்கள். நேரத்திற்கு முன்பாகவே பள்ளிக்கு செல்லுங்கள்!” என்றும், காவல் ஆய்வாளர் பாண்டி வேலு மாணவர்களுடன் அறிவுறுத்திய வீடியோ காட்சி தற்போது வைரல் ஆகி வருகிறது.

மேலும் படிக்க | பேருந்து எண் 375 மற்றும் ‘டைரி’ படத்தின் தொடர்பும் பின்னணியும்!!!