செஸ் ஒலிம்பியாட் வரவேற்புப் பாடல் பிரதமரை வரவேற்கும் பாடல் அல்ல!- மா. சுப்ரமணியன்

44 வட்ஹ் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரவேற்புப் பாடல் குறித்துப் பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா சுப்ரமணியனின் கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

செஸ் ஒலிம்பியாட் வரவேற்புப் பாடல் பிரதமரை வரவேற்கும் பாடல் அல்ல!- மா. சுப்ரமணியன்

2022ம் ஆண்டின் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, இந்தியாவில் அதுவும் தமிழகட்தின் தலைநகர் சென்னையில் நடக்கிறது. முந்தைய போட்டியின் வெற்றியாளர்களான ரஷியா மற்றும் இந்தியாவில் இந்த ஆண்டு போட்டி நடைப்பெற வேண்டுமென்ற நிலையில், உக்ரைன் ரஷிய போர் காரணத்தால், ரஷியாவில் நடத்தாமல், இந்தியாவில் நடத்தினர்.

வருகிற ஜூலை 28ம் தேதி தொடங்கி, ஆகஸ்டு 10ம் தேதி வரை நடக்க இருக்கும் இந்த போட்டிக்கான விளம்பர வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த போட்டிக்கான சின்னத்தை அறிவித்த நிலையில், சென்னையின் அடையாளமாகக் காணப்படும் நேப்பியர் பாலம் முழுவதும், சதுரங்கம் போலவே வண்ணம் தீட்டி, பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் உருவாக்கியுள்ளது தமிழக அரசு. அதுமட்டுமின்றி, இன்று முதல், போட்டியாளர்கள் சென்னைக்கு வருகைத் தருகின்றனர். இந்த நிலையில், இது தொடர்பான ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், ஒரு கருத்தைக் கூறியிருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சமீபத்தில் வெளியான 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாடின் வரவேற்புப் பாடல் வெளியானது. ஏ ஆர் ரஹ்மான் இசையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் தோற்றமளிக்கும் அந்த பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், பத்திரிக்கையாளர் ஒருவர், “செஸ் ஒலிம்பியாட்-டிற்கான பாடலில் ஏன் இந்திய பிரதமர் மோடியின் புகைப்படம் அமையவில்லை?” எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு பதிலளித்த மா. சு, “இது செஸ் ஒலிம்பியாடிற்கான வரவேற்புப் பாடல், பிரதமருக்கான வரவேற்புப் பாடல் அல்ல!” என்று கூறியுள்ளார்.

திடீரென இப்படியொரு பதிலை யாரும் எதிர்பாராத நிலையில், இந்த பதில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஜூலை 28ம் டேதி, இந்த 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிய்இன் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வருகைத் தர இருக்கும் நிலையில், திடீரென இவர் கூறிய அந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.