மெகா சைஸ் காயின்களைக் கொண்ட செஸ் போட்டி.. பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்பு!!

மெகா சைஸ் காயின்களைக் கொண்ட செஸ் போட்டி.. பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்பு!!

காரைக்குடியில் 200 கிலோ எடை கொண்ட மெகா செஸ் காயின்கள் மூலம் செஸ் விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.

44-வது ஒலிம்பியாட் செஸ் போட்டி தொடர்பான, விழிப்புணர்வு போட்டிகள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி மற்றும் காரைக்குடி நகராட்சி சார்பில் செஸ் விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.

இதில், மெகா சைஸ், செஸ் போர்டு மற்றும் காயின்களைக் கொண்டு, அதற்கென அமைக்கப்பட்ட தனி மேடையில் போட்டி நடைபெற்றது. இதில், ஒவ்வொரு காயினும், 2 அடி முதல், 4 அடி உயரமும், 3 கிலோ முதல் 8 கிலோ வரை எடை கொண்டதுமாக வடிவமைக்கப்பட்டது.

இந்த காயின்களை மாணவ, மாணவயிர் நகர்த்தி செஸ் போட்டியில் விளையாடினர். அத்துடன் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டிகளும் நடைபெற்றன. இப்போட்டிகளை,  காரைக்குடி நகராட்சி தலைவர் முத்துதுரை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.