கீழடி அகழாய்வு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

சிவகங்கை மாவட்டம்  கீழடி அகழாய்வு பணிகளை  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கீழடி அகழாய்வு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2014ஆம் ஆண்டு முதல் அகழாய்வு  பணிகள் நடந்து வந்த நிலையில், ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் அண்மையில் நிறைவடைந்தது. அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைப்பதற்கு 12 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், கீழடிக்கு சென்ற முதலமைச்சர் அங்கு நடைபெற்று முடிந்த அகழாய்வு பணிகள் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். 

கீழடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு பணியில் இதுவரை 100 க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு தங்க ஆபரணங்கள் , எடைக்கற்கள் , நாணயங்கள் , சூது பவள பாசி , மணிகள் , யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருட்கள் ,  சுடுமண்ணால் செய்யப்பட்ட பானைகள் , மண் குவளைகள் உள்ளிட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் பார்வையிட்டு  அதன் தொன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.