சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 4வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு...

சென்னையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் 4வது நாளாக நேரில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரிடர் கால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் புகார்களைக் கேட்டறிந்தார். 

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 4வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு...

சென்னை எழிலகத்தில் பேரிடர் அவசர கால பணிக்கென அமைக்கப்பட்டுள்ள மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை பார்வையிட்டார். அப்போது பெறப்பட்ட புகார்களின் விவரம், என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட தகவல்களை கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களின் புகார்களுக்கு 
ஆய்வின்போது, கட்டுப்பாட்டு மையத்திற்கு அவசர எண் வாயிலாக வந்த தொலைப்பேசி அழைப்பை, முதல்வர் ஸ்டாலின் எடுத்து பேசினார்.

அப்போது எதிர்முனையில் பேசிய  கோடம்பாக்கத்தை சேர்ந்த அகிலா என்பவர் தனது வீட்டிற்குள் மழைநீர் தேங்கியிருப்பதாகவும், உடனே அகற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு பதலளித்த ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து, அதுதொடர்பான உத்தரவுகளையும் அதிகாரிகளுக்கு பிறப்பித்தார்.  

இந்தநிலையில் 4வது நாளாக சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தியாகராய நகரில் உள்ள பாண்டிபஜார் பகுதியில் கால்வாய் தூர்வாரி சீரமைக்கும் பணிகளை ஸ்டாலின் பார்வையிட்டார். மேலும் மழையை கருத்தில் கொண்டு விரைந்து பணியை முடிக்கவும் அறிவுறுத்தினார்.