உள்ளாட்சி தேர்தல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை  

உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின்  ஆலோசனை நடத்த உள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை   

உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின்  ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், நீண்ட தாமதத்திற்கு பிறகு  2019ம் ஆண்டு  உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. ஆனால் புதிய மாவட்டங்கள் உருவானதால், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் இன்னும் தேர்தல் நடைபெறாமல் உள்ளது.

இந்நிலையில் டிசம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இன்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா கட்டுப்பாடுகளுடன் உள்ளாட்சித் தேர்தலை சுமூகமாக நடத்துவது குறித்து விவாதிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.