டிஎஸ் சீனிவாசன் நூற்றாண்டு விழா...முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீத அளவில் தமிழ்நாட்டின் பங்களிப்பு உள்ளது என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் சாா்பில், டிஎஸ் சீனிவாசன் நூற்றாண்டு விழா சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சா் மு.க. ஸ்டாலின், The Painted Stark என்ற புத்தகத்தை வெளியிட்டாா். 

தொடா்ந்து பேசிய அவா், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீத அளவில் தமிழ்நாட்டின் பங்களிப்பு உள்ளதாக தொிவித்தாா். 

மேலும் தொழில்துறையில் தமிழ்நாடு பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சா், தொழில் துறையை பொறுத்தவரை அரசு துறையும் தனியார் துறையும் சேர்ந்து வளர்ச்சி அடைய வேண்டும் என்றாா்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு இதுவரை உலகில் எங்கும் நடைபெற்றது இல்லை என்று புகழ் பெரும் அளவிற்கு நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினாா்.