மண்டபம் முகாமில் தக்கியிருக்கும் அகதிகளிடம் காணொலி மூலம் முதலமைச்சர் ஆலோசனை..!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளுடன் காணொலி மூலம் உரையாடிய முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார்.

மண்டபம் முகாமில் தக்கியிருக்கும் அகதிகளிடம் காணொலி மூலம் முதலமைச்சர் ஆலோசனை..!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் அங்கிருந்து அகதிகளாக வரும் தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.

இந்நிலையில் அவ்வாறு அகதிகளாக தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடினார். முகாமில் அவர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை கேட்டறிந்த அவர், தொப்புள் கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருப்பதாகத் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதற்கு தமிழக அரசு தயாராக இருப்பதாகவும், மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் கூறினார். இந்த உரையாடலின் போது சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், செஞ்சி மஸ்தான், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

முன்னதாக இலங்கைத் தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்யவும், அங்கு சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முக ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.