518 கோடி ரூபாய் மதிப்பிலான 21 திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 518 கோடி ரூபாய் மதிப்பிலான 21 முடிவற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

518 கோடி ரூபாய் மதிப்பிலான 21 திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

இத்திட்டத்தின்படி பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அடையாறு, வளசரவாக்கம் பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா, மாதவரம் பஜனைகோயில் தெரு பூங்கா, மணலி பாலங்கள் உள்ளிட்ட பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் ஆலந்தூர் நிலமங்கை நகரில் புதிய கூடுதல் கழிவுநீர் உந்து நிலையம், மணலி மண்டலத்திற்குட்பட்ட விரிவான குடிநீர் வழங்கல் திட்டம் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

பெருந்துறை மற்றும் ஈரோடு பகுதிகளின் கூட்டுக்குடிநீர் திட்டத்தை காணொலி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.

சென்னை மாநகராட்சி, மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். அதோடு கொரோனா தொற்றால் காலமான நிரந்தரப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு 16 புள்ளி 55 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.