பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 114-வது பிறந்த நாள் ... தேவர் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை ...

தேவர் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 114-வது பிறந்த நாள் ... தேவர் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை ...

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 114-வது பிறந்த நாள் மற்றும் 59வது குருபூஜையை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை கோரிப்பாளையத்தில்  அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

முதலில் மதுரை கோரிப்பாளையத்திற்கு சென்ற முதலமைச்சர் அங்கு அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கிருந்து மதுரை தெப்பகுளத்திற்கு சென்ற அவர் அங்கு அமைந்துள்ள மருது சகோதரர்கள் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்த உள்ளார்.