முதலமைச்சர் இன்று மதுரை பயணம்!!

முதலமைச்சர் இன்று மதுரை பயணம்!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் சிலையை திறந்து வைக்க இன்று மதுரை செல்கிறார். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் முதலமைச்சர், இன்று மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை செல்கிறார். அதனை தொடர்ந்து மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில் நிறுவப்பட்டிருக்கும் பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் சிலையை திறந்து வைக்கிறார். 

இதையடுத்து நாளை காலை ராமநாதபுரம் செல்லும் அவர் அங்கு நடைபெறவிருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள இருக்கிறார்.

இதையும் படிக்க || "மன உளைச்சல் ஏற்படுத்துகிறார்கள்"... காவல் ஆய்வாளர் வீடியோ வைரல்!!