காலநிலை மாற்றத்திற்காக ரூ.500 கோடி ஒதுக்கி தமிழக அரசு சாதனை...!

காலநிலை மாற்றத்திற்காக ரூ.500 கோடி ஒதுக்கி தமிழக அரசு சாதனை...!

இந்தியாவிற்கு வழிகாட்டும் வகையில் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த பல திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள, நாமக்கல் கலைஞர் மாளிகையில் முதலமைச்சர் தலைமையில், தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாட்டிற்கான காலநிலை திட்டத்தை அறிவித்து நிதிநிலை அறிக்கையில் 500 கோடி ரூபாயை ஒதுக்கி இந்தியாவிற்கே முன்மாதிரியாக செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார். 

இதையும் படிக்க : 22 மாதங்களில் கொள்ளையடித்த பணத்தால் கிடைத்த போலியான வெற்றி - ஜெயக்குமார் பேட்டி!

வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களை கையாள்வது போல, புதிய புதிய வெப்ப அலைகளையும் நோய்களையும் கையாள தயாராக வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக் கொண்ட முதலமைச்சர், அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.