முதலமைச்சரின் கன்னியாகுமரி பயணம்... எதிர்ப்பு தெரிவிக்கும் நாடார்கள்....!!

முதலமைச்சரின் கன்னியாகுமரி பயணம்... எதிர்ப்பு தெரிவிக்கும் நாடார்கள்....!!

கள ஆய்வுக்காக மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கன்னியாகுமரியில் நடைபெறும் தோள் சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

மதுரை பயணம்:

3 நாள் பயணமாக மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அப்போது மோசமான நிதிநிலையில் ஆட்சி அமைத்த திமுக அரசு, அதனை மேம்படுத்தி வரும் நிலையில், நிறைவேற்றப்படாத 27 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுத்து வருதாகவும் தெரிவித்துள்ளார். 

கீழடி:

அதனை தொடர்ந்து சிவகங்கையில் கீழடியில் அமைக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தினை திறந்து வைத்துள்ளார் முதலமைச்சர்.  அருங்காட்சியத்தில் 18 கோடியே 41 லட்ச ரூபாய் செலவில் உலகத்தரத்துடன் நவீன விளக்குகள், ஒலி - ஒளி காட்சிகள், மினி தியேட்டர், உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் தொல் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  அதனை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதனுடன் செல்ஃபி எடுத்து கொண்டார்.

தோள்சீலை நிகழ்ச்சி:

இதனிடையே 2ஆம் நாள் பயணமாக கன்னியாகுமரி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகர்கோவில் நடைபெறும் தோள் சீலை 200-வது ஆண்டு நிறைவு பொதுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் பல்வேறு இடதுசாரி கட்சித்தலைவர்கள் பங்கேற்க உள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்ப்பு:

மேலும் தெரிந்துகொள்க:   இதற்கு இரண்டு முதலமைச்சர்கள் பங்கேற்பது என்பது கண்டிக்கத்தக்கது....தமிழ்நாடு சட்டசபையை ஸ்தம்பிக்க வைப்போம்..!!

தோள்சோலை போராட்டம் கன்னியாகுமரி பெண்களுக்கு நடக்கவில்லை எனவும் வரலாறு திரித்து கூறப்படுவதாகவும் நிகழ்ச்சியில் நாடார்கள் தரக்குறைவாக பேசப்பட்டால் சட்டமன்றத்தையே ஸ்தம்பிக்க செய்வோம் என தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:   இரட்டை தங்கம் வென்று சாதனை படைத்த தமிழ்நாடு வீராங்கனை...!!