நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ளும் இணையதளம் அறிவிப்பு...

தமிழகத்தில் நாளை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வெளியிடப்படவுள்ள நிலையில், அதற்கான இணையதள விவரங்களை அரசு அறிவித்துள்ளது.

நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ளும் இணையதளம் அறிவிப்பு...

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்ணில் 50 சதவீதம், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்ணில் 20 சதவீதம், 12ஆம் வகுப்பு செய்முறைத்தேர்வு மதிப்பெண்ணில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்று விட்ட நிலையில், நாளை காலை 11 மணிக்கு மதிப்பெண்கள் வெளியிடப்படுகின்றன.

www. tnresults.nic.in  www.dge1. tn.nic.in, www.dge2. tn.nic.in, www.dge. tn.gov.in இணையதளங்களில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.அதேப்போல மாணவர்கள் பள்ளியில் சமர்பித்த அலைப்பேசி எண்ணிற்கும் மதிப்பெண் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும் அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து வரும் 22-ஆம் தேதி காலை 11 மணி முதல் www.dge. tn.gov.in, www.dge. tn.nic.in இணையதளங்களில், மாணவர்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து, மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.