தொடரும் தடுப்பூசி தட்டுப்பாடு... சென்னையில் இரண்டாவது நாளாக தடுப்பூசி மையங்கள் மூடல்...
சென்னையில் தடுப்பூசி தட்டுபாடு காரணமாக இன்றும் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் ஜெபக்கூட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் செய்தவரகளை கைது செய்யக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு அமைப்பினருடன் தாக்குதலுக்குள்ளான பரபரப்பு வீடியோ பதிவுடன் எஸ்பியிடம் புகார் மனு அளித்தனர் .
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாலைமுரசு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஜெனிபர் கூறுகையில் ....
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பசுவபட்டி பிரிவு தாசன்காட்டு புதூரை சேர்ந்தவர் அர்ஜூனன் (62). ஓய்வுபெற்ற சத்துணவு ஆசிரியர். இவரது மனைவி ரத்தினம் என்ற எப்சிபா (57). இவர்களது மகள்கள் பியூலா (31), ஜெனிபர் (25), மகன் சாமுவேல் (34) ஆவர். இவர்கள் கடந்த 17ம் தேதி அர்ஜூனனுக்கு சொந்தமான முருங்கத்தொழுவு ஊராட்சி கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில் உள்ள ஓட்டு வீட்டில் ஜெபம் செய்து வந்தனர்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி, அவரது மகன் கோகுல் மற்றும் அடையாளம் தெரியாத 30 பேர் அர்ஜூனனிடம் சென்று ஜெபம் செய்யக்கூடாது என தகராறு செய்தனர். இதனை தடுக்க வந்த அர்ஜூனனின் மனைவி ரத்தினம், மகள் பியூலா, மகன் சாமுவேல், மருமகள் ஜெனிபர் ஆகியோரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதில், காயமடைந்த அர்ஜூனன், ரத்தினம், பியூலா ஆகிய மூவரும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர், இது குறித்து அர்ஜூனன் கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப்பதிந்து சின்னச்சாமி அவரது மகன் கோகுல் மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், யாரையும் கைது செய்யவில்லை.
இந்நிலையில், கிறிஸ்தவ முன்னணி இயக்கத்தின் சார்பில், பல்வேறு அமைப்பினருடன் பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு 4 நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாமலும், தண்டிக்கப்படாமல் இருப்பது எங்களுக்கு மனவேதனையளிக்கிறது. எனவே, அவர்களை விரைவாக கைது செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
இதையும் படிக்க | மர்ம காய்ச்சலால் அவதிப்படும் கிராமம்... ஒருவர் உயிரிழப்பு!!
மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறிப்பிட்ட காலத்தில் மக்களை சென்றடைய வேண்டும் என திமுக எம்.பி. தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.
சென்னை ரிப்பன் கட்டட வளாகம் அம்மா மாளிகையில் சென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், சென்னை மாவட்ட வளர்ச்சிக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், மக்கள் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசு அளிக்கின்ற நிதி குறித்தும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.
ஆலோசனை கூட்டத்தின் போது மேடையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், “தொடர்ந்து சென்னையில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீர் அகற்ற வசதி, மருத்துவ வசதி, தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என திட்டமிட்டு இருக்கிறோம். இதில் ஒன்றிய அரசு தனது பங்களிப்பை மாநில அரசோடு சேர்ந்து செயல்படுத்தி வருகிறது. அவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறிப்பிட்ட காலத்தில் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கப்பட வேண்டும் என்பதற்குத்தான் இந்த ஆலோசனைக் கூட்டம்”, எனக் கூறினார்.
இங்கு வருகை தந்திருக்க கூடிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவரவர் தொகுதியில் நடைபெற்று வருகிற பணிகள் குறித்த குறிப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவரவர் சட்டமன்ற தொகுதிகளில் என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது, அதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, எந்த நிலையில் அந்த திட்டம் நிலுவையில் உள்ளது என்பதும் தெளிவாக அதில் உள்ளது எனக் கூறினார். மேலும், அந்த கூட்டத்தில், அதிகாரிகளின் விளக்கங்களும் ஆலோசனைகளும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், சென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழுவின் தலைவரும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்தார். கூட்டத்தில், மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் வேலு, சுதர்சனம், அசன் மவுலானா, எபினேசர், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க | " 33 % மகளிர் இட ஒதுக்கீடு கானல் நீர் போன்றது" - கி.வீரமணி
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும், வரும் 29 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : உடல் உறுப்பு தானம் பெற 6-த்திற்கும் மேற்பட்டோர் காத்திருப்பதாக மா.சுப்பிரமணியன் தகவல்!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வைகை ஆற்றில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றை நீர் நிலைகள் பாதுகாப்பு குழுவினர் சுத்தம் செய்யும் பணி கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் தொடங்கியது. பாரம்பரியம் மிக்க வைகை ஆறு தேனி மாவட்டம் வருஷ நாடு மலைப்பகுதியில் உற்பத்தியாகி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்கிறது. மானாமதுரை நகரின் மொத்த கழிவு நீர் மற்றும் பொதுமக்கள் விட்டுச் சென்ற குப்பைகள் என வைகை ஆறு மாசுபட்டுள்ளது. வைகை ஆறு முழுவதும் கருவேல மரங்கள், நாணல்களால் நீரோட்டமும் தடைபட்டு வருகிறது.
அதே போல் மற்ற இடங்களில் கிழக்கு நோக்கி பாயும் வைகை ஆறு மானாமதுரையில் மட்டும் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் வைகை ஆற்றை சுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து நீர்நிலைகள் பாதுகாப்பு குழு சார்பாக இன்று வைகை ஆற்றை சுத்தம் செய்யும் பணியை சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் தொடங்கி வைத்தார்.
மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி, நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், சுரேஷ், பள்ளி மாணவ, மாணவியர்கள், நகராட்சி ஊழியர்கள். தன்னார்வலர்கள், பக்தர்கள், நீர்நிலைகள் பாதுகாப்பு குழுவினர், விவசாயிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் நடந்த இந்த மெகா சுத்தம் செய்யும் பணியில் ஏராளமானோர் பங்கேற்று வைகை ஆற்றில் கிடந்த துணிகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்தனர். ஜேசிபி இயந்திரம் மூலம் நாணல்கள், கருவேல மரங்கள் அகற்றப்பட்டன.
இதையும் படிக்க || மர்ம காய்ச்சலால் அவதிப்படும் கிராமம்... ஒருவர் உயிரிழப்பு!!
இதயம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளை தானம் பெற 6 ஆயிரத்து 811 பேர் பதிவு செய்து காத்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் மற்றும் உடல் உறுப்பு தானம் தினம் குறித்த நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் மற்றும் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் ஒரு கோடியே 44 லட்சத்து 70 ஆயிரம் குடும்பத்தினர் பயன்பெற்றுள்ளதாக கூறினார்.
நிகழ்ச்சியின் இடையே பேசிய மருத்துவர் அசோகன், தனது மகன் ஹிதேந்திரன் மறைந்து 15 ஆண்டுகள் ஆன நிலையில், அவனது உடல் உறுப்புகள் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாக நெகிழ்ச்சி தெரிவித்தார்.
இதையும் படிக்க : ’த்ரீ எக்ஸ் த்ரீ’ கூடைப்பந்து போட்டி; தமிழ்நாடு ஆடவர் அணி முன்னேற்றம்!
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். கடந்த இரண்டரை ஆண்டுகளில் 313 கொடையாளர் மூலம், ஆயிரத்து 242 உறுப்புகள் தானமாக பெறப்பட்டதாக கூறிய அவர், இதன் மூலம் 663 பேர் பயன் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்ற மனிதாபிமானத்துடன் கூடிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.