கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீட்டில் ரெய்டு... வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்...

தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவனுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீட்டில் ரெய்டு... வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்...

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவரும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் ஜெயலலிதா பேரவையின் புறநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர் இளங்கோவன். இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள இளங்கோவன் வீடு, கல்வி நிறுவனம் உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம், சென்னை, திருச்சி உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் பண மதிப்பு இழப்பின்போது சேலம் கூட்டுறவு வங்கி மூலம் 600 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், 2014 முதல் 2020ம் ஆண்டுக்குள் வருமானத்திற்கும் அதிகமாக சுமார் 4 கோடிக்கு சொத்து சேர்ந்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன் குமார் மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.