கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை எதிரொலி... ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு...

கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை எதிரொலி... ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு...

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் ரயில் நிலையத்தில் ரூட்டுதல மோதலில் கல்லூரி மாணவர் குமார் என்பவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கல்லூரி மாணவர்கள் மோதல்களை தவிர்க்க சென்னைக்கு வரும் புறநகர் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

அதன்படி, ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக கும்மிடிபூண்டி - சென்ட்ரல், அரக்கோணம் - சென்ட்ரல், செங்கல்பட்டு - சென்ட்ரல் ஆகிய மார்க்கத்தில் செயல்படும் புறநகர் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி, டி.எஸ்.பி முத்துக்குமார் மேற்பாற்வையில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் 50-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர்.