12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி...கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி...கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு முழுவதும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக அச்சங்க மாவட்ட தலைவர் சித்திரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் பங்கேற்று 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதேபோன்று, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திரண்ட தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

இதையும் படிக்க : மாணவிகள் புகார் கூறிய ஆசிரியர்களுக்கு கல்லூரிக்குள் அனுமதியில்லை...மாநில மகளிர் ஆணைய தலைவி அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஏராளமானோர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர். 

இதேபோல், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இப்படி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வரும் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளில், விவசாய பயிர் கடன், நகைக்கடன் மற்றும் மகளிர் சுய உதவி கடன்களை தள்ளுபடி செய்த நிலையில், அதற்கான உரிய தொகையை வட்டியுடன் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்க வேண்டும் என்பது இவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.