100 ஜிப்ஸி ரோந்து வாகனங்கள் துவக்கி வைத்த கமிஷனர்....

சென்னை காவல்துறைக்கு புதிதாக வண்ண விளக்கு பொருத்திய 100 ஜிப்ஸி ரோந்து வாகனங்களை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்துள்ளார்.

100 ஜிப்ஸி ரோந்து வாகனங்கள் துவக்கி வைத்த கமிஷனர்....

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையில் சட்டம் ஒழுங்கு பணிக்காக 91 மெயின் ரோந்து வாகனங்களும் 36 கூடுதல் ரோந்து வாகனங்கள், 104 ஜிப்சி ரோந்து வாகனங்கள் மற்றும் 41 சிறப்பு மொபைல் ரோந்து வாகனங்கள் என ஏற்கனவே இயங்கி வருகிறது.

மேலும் படிக்க | எஸ்.பி உத்தரவுகளுக்கு இவ்வளவு தான் மரியாதையா?

மேலும் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்காக 47 போக்குவரத்து ரோந்து வாகனங்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மகளிர் காவல் நிலையத்திற்கு மட்டும் 35 இளம் சிவப்பு ரோந்து வாகனங்கள் என மொத்தம் 354 ரோந்து வாகனங்கள் இயங்கி வருகிறது.

இதனிடையே தமிழக முதலமைச்சர் கடந்த ஜூன் மாதம் சட்டம் ஒழுங்கு பணிக்காக 46 Crista ரோந்து வாகனங்களையும் போக்குவரத்து பிரிவிற்கு 47 ரோந்து வாகனங்களையும் தொடங்கி வைத்தார்.

மேலும் படிக்க | காந்தி ஜெயந்தி: உலக அமைதியை வலியுறுத்தி மிதிவண்டி பேரணி!

குறிப்பாக காவல் கட்டுப்பாட்டறைக்கு வரும் புகார்களை உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரச்சனைகளை தீர்க்கப்பட்டு அதற்கு முடிவு கட்டுவதால் பொதுமக்களிடம் இந்த ரோந்து வாகனங்களுக்கு அதிக அளவில் வரவேற்பு இருக்கிறது.

இதனால், முதற்கட்டமாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தனியார் வங்கியின் நிதி மூலமாக 22.75 லட்சம் ரூபாய் செலவில் 100 வண்ண விளக்கு பொருந்திய ஜிப்ஸியை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கி வைத்துள்ளார்.

மேலும் படிக்க | யானை தந்தம் பதுக்கிய இருவர் கைது...