"15 நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல்" சென்னை ஆணையர் அறிவிப்பு!

"15 நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல்" சென்னை ஆணையர் அறிவிப்பு!

"சென்னையில் 15 நாட்களுக்கு மேல் வாகனங்கள் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டால், அது பறிமுதல் செய்யப்படும்" என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை, புதுப்பேட்டை அருகே உள்ள கூவம் பகுதியில் சென்னை மாநகராட்சியின் ஆணையர் ராதாகிருஷ்ணன்  ஆய்வு ஆய்வு மேற்கொண்டார்,  மழைநீர் செல்லும் பாதைகளில் குப்பை அடைபட்டு இருந்ததைப் பார்த்து ஆணையரே இறங்கி அவற்றை சுத்தம் செய்தார்.  அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய  சென்னை மாநகராட்சியின் ஆணையர் ராதாக்கிருஷ்ணன், இப்பகுதியில் புதிய கழிப்பிடம் கட்ட படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் காரின் இடி பொருட்கள், கட்டிடக்கழிவுகள் அனைத்தும் கூவத்தில் கொட்டுப்படுகிறது. மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயத்தில் இவை அடைப்பை ஏற்படுத்தும்போது ஏதோ ஒரு இடத்தில் வெள்ள பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

இப்பகுதியில் உரிமைத்தொகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு ஏற்படுத்தி தர வாக்குறுதி அளித்து உள்ளோம்.  இப்பகுதிகளில் டெங்கு காய்ச்சல் எலிக் காய்ச்சல்   போன்ற நோய்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தொடர்ச்சியாக இப்பகுதியினை சுகாதாரமற்ற நிலையில் இருந்து மீட்டெடுக்க  பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனக் கூறினார்.

இப்பகுதியின் தெருக்கள் ஓரமாக குப்பைகள் கொட்ட கூடாது என்று  எச்சரிக்கை பலகை வைக்கப்படும் என அவர் குறிப்பிட்ட அவர், கார்கள் பழுது பார்ப்பதற்கு தனியாக இடம் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பணியாளர்களுடன் சேர்ந்து தானும்  இன்று நேரடியாக களத்தில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்தார்.

12 இடங்களில் இது போன்ற சுகாதார சீரற்ற நிலையில் இருப்பதாகவும் அவையெல்லாம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், எந்த ஒரு இடத்திலும் 15 நாட்களுக்கு மேல் வாகனம் நிறுத்தி வைத்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரிக்கை விடுத்தார்.  

இந்த வாகனங்கள் நிறுத்துவதால் தான் டெங்கு கொசு அதிக அளவு உற்பத்தியாகிறது எனவும், இது போன்ற குப்பைகள் கொட்டாமல் இருப்பதற்கு மக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும்  வேண்டுகோள் விடுத்த அவர்,  6000 மெட்ரிக் டன் குப்பையில் 1500 மீட்டர் பயோ கேஸ் தயாரிப்பதாகவும், பெருங்குடி கொடுங்கையூர் போன்ற இடங்களில் எக்கோ பார்க் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க:"விடுதலை சிறுத்தைகள் கனவு நனவாகிறது" திருமா பெருமிதம்!