9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவு

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ளது.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவு

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட 9 மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டதால் வார்டு மறுவரையறை காரணமாக கடந்த 2019ம் ஆண்டு இந்த மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. இந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இதில், பல்வேறு கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை கட்சியினரும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். 


இந்நிலையில், 6 நாட்களாக நடைபெற்ற வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கடந்த 6 நாட்களில் 64 ஆயிரத்து 299 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெற உள்ளது. மேலும், வேட்புமனுக்களை திரும்பப்பெற நாளை மறுநாள் கடைசி நாள் ஆகும்.