காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு..!

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல்  நாளை வெளியிடப்படும் என அக்கட்சியின் நகர்புற தேர்தல் மேலிட பார்வையாளர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு..!

சென்னை சத்தியமூர்த்தி பவனில்  செய்தியளார்களை சந்தித்த  ரமேஷ் சென்னிதாலா,  காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று இரவு அல்லது  நாளை உறுதியாக வெளிவரும்  வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.,திமுக இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை  நிறைவடைந்து விட்டது என்றார்.

திமுகவுடன் கொள்கை முடிவுகளில் பயணிப்பதாக குறிப்பிட்ட அவர், பாஜக தனித்து நின்றாலும் கூட்டணியாக நின்றாலும் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருப்பதால் அதற்கான வேட்புமனு தாக்கல் இன்னும் இரண்டு நாட்களில் நிறைவடைய உள்ளது. தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் தங்களுடைய வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றன ஆனால் காங்கிரஸ் கட்சியானது இன்னும் தங்களுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை என்பது  குறிப்பிதக்கது.