மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்...!

மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்...!

ராகுல்காந்தியை எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மத்திய தொலைதொடர்பு அலுவலகத்தை முற்றுக்கையிட்டு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பகவதி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் 50க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

இதையும் படிக்க : விரைவில் டிஎன்பிஎஸ்சி தலைவராகும் சைலேந்திரபாபு?

இதேபோன்று, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . அப்போது மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதனைதொடர்ந்து, நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் ராகுல்காந்தியின் பதவி பறிப்பை கண்டித்து தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு நாங்குநேரி டிஎஸ்பி ராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.