புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி; அமைச்சர் உதயநிதி ஆய்வு!

புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி; அமைச்சர் உதயநிதி ஆய்வு!

அண்ணாசாலையில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நடை மேம்பாலம் அமைக்கப்படுவது தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேரில் ஆய்வு செய்துள்ளனர். 

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும  தலைவரும்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு  ஆகியோர் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-2024 ஆம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில்  சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை அண்ணா சாலை-  டேம்ஸ் சாலை - ஜெனரல் பீட்டர்ஸ் சாலை சந்திப்பில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிய நடை மேம்பாலம் அமைக்கப்படுவது தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.Image

இதனை தொடர்ந்து சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் பூங்கா, சுற்றுச்சுவர், பார்வையாளர் மாடம், பயிற்சி ஆடுகளம் மற்றும் விளையாட்டு அரங்கம் போன்ற வசதிகளுடன் பூங்காவை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டனர். Image

மேலும் இந்த ஆய்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க:"காசு வாங்கிக்கொண்டு ஓட்டுபோட வேண்டாம்" மாணவர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை!