தொடர் கனமழை...குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு....ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.....

தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு,  பாதுகாப்பு வளையத்தை கடந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

தொடர் கனமழை...குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு....ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.....

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதுடன், அவ்வப்போது வங்கக் கடலில் ஏற்பட்டு வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

அதேபோன்று தென்காசி மாவட்டம் மற்றும் அதன்  சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதிகளில் இன்று காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு,  பாதுகாப்பு வளையத்தை கடந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதேபோல் பழைய குற்றால அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத் தலமான குற்றால அருவிகளில் கொரோனா விதிமுறையால் சுற்றுலா பயணிகள்  குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதால், அங்கு வரும் பயணிகள் அருவிகளை ரசித்து செல்கின்றனர். தமிழகத்தில் கொரோனா தடை நீக்கப்படாத ஒரே சுற்றுலா ஸ்தலம் குற்றாலம் என்பது குறிப்பிடத்தக்கது.