மெட்ரோ ரயில் 2 கட்டம்; ரயில் விகாஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம்!

மெட்ரோ ரயில் 2 கட்டம்; ரயில் விகாஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம்!

மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட கட்டுமான பணிகளை செய்வதற்கு ரயில் விகாஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 

சென்னை மெட்ரோ ரயில்  2ம் கட்டம் வழித்தடம் 3ல் மூன்று பிரிவில் ரயில் நிலையங்கள் அமைப்பதற்காக ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்திற்கு 4058 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகள் மூன்று வழித்தடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது வழங்கப்பட்டுள்ள 3 ஒப்பந்தங்களும் கீழ்பாக்கம் மெட்ரோவில் இருந்து தரமணி வரை 12 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களில் அனைத்து வகையான பணிகளும் அமைப்பதற்காகவும், மேலும் நான்கு சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்களில் டயாபிராம் சுவர் தவிர மற்ற கட்டுமான பணிகளுக்கு இந்த ஒப்பந்தத்தில் உள்ளடங்கும் என தெரிவித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் சித்திக், திட்ட இயக்குனர் அர்ஜுனன் மற்றும் ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தின் தலைமை திட்ட மேலாளர் கமலாகர ரெட்டி உள்ளிட்டோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க|| ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி; காவல்துறையின் தோல்வி; இ.பி.எஸ். விமர்சனம்!