முப்படை  தலைமை தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்து எனக்கு சந்தேகம் உள்ளது: சர்ச்சையை கிளப்பும் சுப்பிரமணிய சுவாமி...

முப்படை  தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் தனது சந்தேகம் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி டிவிட்டரில் பதிவிட்டுள்ளதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

முப்படை  தலைமை தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்து எனக்கு சந்தேகம் உள்ளது: சர்ச்சையை கிளப்பும் சுப்பிரமணிய சுவாமி...

கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று முன் தினம்  காலை 11.30 மணிக்கு முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணித்த ஹெலிகாப்டர்  குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சி மைதானத்தில் இருக்கும் சிப்கானா கிளப்பில் தரையிறங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. மேட்டுப்பாளையம் அருகே சென்ற போது பனிமூட்டம்  காரணமாக காட்டேரி மலைப்பகுதியில் உள்ள மலை முகடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி, அவரின் மனைவி மதுலிகா ராவத், மற்றும் உயர் ராணுவ அதிகாரிகள் என அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்  முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை அமைக்கப்பட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. இதனால் மத்திய அரசு இதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி போன்ற வெளியாட்கள் தலைமையில் விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.