நடைபயிற்சியின்போது பொதுமக்களுடன் உரையாடல்... வைரலாகும் முதலமைச்சரின் வீடியோ...

பொதுமக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய ஸ்டாலின் மக்களிடம் நிறை, குறைகளைக் கேட்டறிந்தார்.

நடைபயிற்சியின்போது பொதுமக்களுடன் உரையாடல்... வைரலாகும் முதலமைச்சரின் வீடியோ...

உடலினை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்வதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி வருகிறார். அதனை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் முதல்வர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் தற்போது சென்னை அடையாறு பகுதியில் அமைந்துள்ள தியோசோபிகல் சொசைட்டி பூங்காவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, அங்கிருந்த பொதுமக்களை சந்தித்து, கலந்துரையாடினார். நிறை, குறைகளையும் கேட்டறிந்தார். இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.