சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் மூதாட்டி பலி...

சேலம் அருகே வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் மூதாட்டி பலியானார்.  6 பேர் படுகாயமடைந்தனர். 

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் மூதாட்டி பலி...

சேலம் மாவட்டம், கருங்கல்பட்டி குகை பகுதி, பாண்டுரங்கன் கோயில் தெருவில் உள்ள வீட்டில் இன்று காலை திடீரென பலத்த சத்தத்துடன் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக பலியனார். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் படுகாயமடைந்த 6 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து தரைமட்டமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.