கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி.. அரசாணை வெளியீடு

கூட்டுறவு வங்கிகளில் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைக்கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி.. அரசாணை வெளியீடு

தமிழகத்தில்  திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு சங்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார்.

அதன்படி திமுக ஆட்சியை பிடித்த நிலையில் 6 ஆயிரம் கோடி மதிப்பிலான கூட்டுறவு  நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தார். ஆனால்  கடந்த ஆட்சியில் கூட்டுறவு  சங்கத்தில் பல்வேறு முறைகேடு நடந்தது அம்பலமானதால் நகைக்கடன் தள்ளுபடி செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், கூட்டுறவு வங்கிகளில் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைக்கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஒரு குடும்பத்துக்கு 5 சவரன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுபடி மூலம் சுமார் 16 லட்சம் நகைக்கடன்தாரர்கள் பயன்பெறுவர் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது. தள்ளுபடி தொடர்பான கூடுதல் நெறிமுறைகளை கூட்டுறவு சங்கப் பதிவாளர் வகுத்து கொள்ளலாம் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.