மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று...  

சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று...  

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்றாமாண்டு பயின்றுவரும் மாணவருக்கு கடந்த 13ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த  கல்லூரியில் உள்ள மாணவர்கள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள் என 570 நபர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதில் 12  மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக, ஒரே கல்லூரியில் மொத்தம் 13 மாணவர்களுக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து அருகில் இருக்க கூடிய வேப்பேரி சித்தா கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

அனைவரும் தற்போது நல்ல உடல் நலத்துடன் உள்ளதாக கூறிய மாநகராட்சி அதிகாரிகள், இந்த கல்லூரியில் உள்ள பெரும்பாலானோர் முதல் தவனது  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் கல்லூரி தொடங்கும் முன் தடுப்பூசி செலுத்தாதவர்கள் RTPCR பரிசோதனையில் Negative என்ற சான்று கொடுத்த பின்னரே அனுமதிக்கப்பட்டுள்ளனர் என விளக்கம் அளித்துள்ளனர். இதன் காரணமாக, கல்லூரியின் விடுதி மற்றும் வகுப்பறை முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்திகரிக்கப்பட்டுள்ளது.