நரிக்குறவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்... அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்...

நரிக்குறவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை சென்னை மெரினா கடற்கரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

நரிக்குறவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்... அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்...

நரிக்குறவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர்ன் ககன்தீப் சிங் பேடி உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன்,

தமிழகத்தில் தடுப்பூசி பணிகள் எல்லா நிலைகளிலும் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கோடியே 2 இலட்சத்து 54 ஆயிரத்து 633 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 64 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, இதில் 22 சதவீதம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 68 இலட்சத்து 56ஆயிரத்து 278 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை சென்னையில் 83 சதவீதம், இரண்டாவது தவணை 40 சதவீதம் செலுத்தி உள்ளனர். சென்னை மாநகராட்சி தடுப்பூசி செலுத்தும் பணியில் முதல் இடத்தில் உள்ளது.

அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி என்ற முறையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கர்பிணிகளுக்கு அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்படுள்ளது. 4, லட்சம் 80 ஆயிரத்து 875 கர்பிணி பெண்களுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 லட்சத்து 80 ஆயிரத்து 27 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுள்ளது.

இந்தியாவிலேயே மாற்றுதிறனாளிகளுக்கென தனி முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தி தமிழகம் முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது. சாலையோரத்தில் இருப்பவர்களுக்கு 1761 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் நரிகுறவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் விதமாக சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி மெரினா கடற்கரையில் பல ஆண்டுகளாக இரவில் தங்கி வருவதால் அவர்களுக்கு தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.  

நாளை ஐந்தாம் தடுப்பூசி முகாம் தமிழகத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகாம் அமைக்க மாவட்ட ஆட்சியர், அந்தந்த மாவட்ட நிர்வாகமும் தீவிரமாக செய்து வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட முகாம்களில் நாளை நடைபெறும் முகாம்களில் அதிகம் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இதுவரை நடைபெற்ற  தடுப்பூசி முகாமில் முதல் முகாமில் 28 லட்சத்து93 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த சாதனையும் நாளை முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறிய அவர், எல்லா முகாம்களிலும் கோவாக்சின், கோவிட்ஷீல்ட் இரண்டு தடுப்பூசிகளும் இருப்பு உள்ளது. அனைத்து மக்களும் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார். மேலும் அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இல்லை, எக்ஸ்.ரே பிலிம் குறித்த பொய் புகார்களை சமூகவலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

அதுபோன்ற நிலை தமிழகத்தில் இல்லை என தெரிவித்தார். ஆதாயத்திற்காக திட்டமிட்டு பொய்யாக சிலர் வேண்டும் என்று பரப்பப்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும் கேரளா எல்லைகளில் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நோய்த்தொற்றுகள் குறைந்த போதிலும் சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி,
சென்னையில் நாளை 1600 தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும்,, ஒரு வார்டில் 8 முகாம் நடைபெறும் என தெரிவித்தார், ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் 83 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளார்கள். மீதமுள்ள மக்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி, 
கோவை, திருப்பூர், சேலம் போன்ற மாவட்டங்களில் தொற்று அதிகரித்த போது தடுப்பூசி செலுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு தொற்று குறைக்கப்பட்டது. எனவே தடுப்பூசி செலுத்துவதால் நோய் எதிர்ப்பு அதிகரிக்கப்படும் நோய் பாதிப்பு குறையும். எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுகொண்டார்.