கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்...சுகாதாரத்துறை உத்தரவு

கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும், தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளார்.

கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்...சுகாதாரத்துறை உத்தரவு

தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக அதிகாரிகளை தொடர்ந்து கல்லூரியில் பயிலும் 18 வயது நிரம்பிய மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரனோ தடுப்பூசி போடும் திட்டத்தை சுகாதாரத்துறை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில் இன்று முதல் 18 வயதுக்கு மேல் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட சுகாதார துணை இயக்குனர்களுக்கும் பொது சுகாதார இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.  

இதுதொடர்பாக பொதுசுகாதாரத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.  மாவட்ட வாரியாக உள்ள அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் 18 வயது நிரம்பிய மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தும் விதமாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்திட பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

 கலை அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் என அனைத்து கல்லூரி முதல்வர்களையும் சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைத்து தடுப்பூசி முகாம் நடத்திட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.